நாளை வடக்கிற்குச் செல்கிறார் பசில்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளை முதல் 2 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலையிலான பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய அரசியல் செயற்பாட்டளராக பசில் ராஜபக்ச இருந்து வருகின்றார். இந்நிலையில், உள்ளூராட்சி சபை தேர்தலில் பொதுஜன பெரமுன தனித்து களமிறங்கவுள்ளது. இதற்கு தமிழர் தரப்பின் ஆதரவும் தேவைப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு வடக்கு பகுதி மக்களின் வாக்குகளும் பிரதான காரணமாக அமைந்தது.இந்நிலையில், சிறுபான்மையினரின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மூன்று நாள் விஜயமாக பசில் ராஜபக்ச வடமாகாணத்துக்கு பயணம் செய்யவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்