திருட்டு சம்பவம்: வவுனியாவில் முன்னாள் ராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது!

வவுனியாவில் வீதியில் பயணித்தவர்களிடம் சஙிகிலி அறுத்த சம்பவம் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ வீரர் உள்ளிட்ட மூவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் வீதியில் செல்பவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தங்கச்சங்கிலியை அபகரித்துச் சென்றமை, நகைகள் திருடப்பட்டமை என பல்வேறு முறைப்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர் நிஜாம் அவர்களின் தலமையிலான குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதன் போது வவுனியாவில் வைத்து 20, 21, 25 வயதுடைய அனுராபுரம், நீராவி, சாலபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் இரானுவ வீரர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை
வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03) 33வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்