திருமலையில் யானை தாக்கி ஒருவர் பலி

திருகோணமலை – செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

சேருவில காட்டுப் பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று (28) காலை சென்ற நபர் வீடு திரும்பாததால் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்