விடுதலைப் புலிகளை சார்ந்தோருக்கு எதிராகவும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமாம்!

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில், அந்த விசாரணைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சர்வதேச வலையமைப்பு என்பவைத் தொடர்பிலும் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் இயலுமை விரித்தி தொடர்பான விவாதம் ஒன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது புருண்டியில் இயங்கும் நிலையான அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்புக்கான சங்கம் முன்வைத்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தில் விடுதலைப் புலிகளும் பல குற்றங்களைப் புரிந்துள்ளனர்.

இலங்கைக்கு எதிராக யுத்தக்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அவ்வாறான விசாரணை நடத்தப்படும் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்