இழப்பீட்டை நிராகரிக்கிறார் வித்தியாவின் தாய்!

தனது மகளை ஈவிரக்கமின்றி கொலை செய்த பாதகர்கள் வழங்கும் ஐந்து சதம் கூட தனக்கு வேண்டாம் என்று படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலையாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை வழங்கிய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், வித்தியாவின் குடும்பத்திற்கு நட்டஈடாக ஏழு பேரும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வித்தியாவின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி, தன் மகளை விட பணம் முக்கியமானதல்ல என்றும் அதிலும் கொலையாளிகள் வழங்கும் பணம் சிறிதும் வேண்டவே வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகளை கல்வியில் முன்னேற்ற தான் அரும்பாடுபட்டதாக குறிப்பிட்டுள்ள வித்தியாவின் தாயார், தான் கண்ட கனவு மண்ணோடு மண்ணாக போய்விட்ட நிலையில் இனி எதுவும் வேண்டாமென விரக்தியுடன் கூறியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சுவிசில் நடைபெற்ற 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், தமிழீழ
கடந்த நாட்களாக எமது தாயகத்தில் சீரற்ற காலநிலையால் தொடரும் அடைமழை காரணமாக எமது தேசத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.ஆயிரக்கணக்கான
நாளை உங்களது கணவருக்கு பிணை வழங்க ஏற்பாடுசெய்கிறோம் நீங்கள் உங்களது கைக்குழந்தையின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு வீட்டிற்கு செல்லுங்கள்

1 comments

மறுமொழி இடவும்

*