புதிய அரசியல் சட்டமூலத்தில் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லையென சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு சட்டமூலம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 72ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பௌத்த சமயத்துக்கான முன்னுரிமைத் தன்மையிலும் எதுவித மாற்றமும் புதிய சட்டமூலத்தில் கொண்டுவரப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.