மியன்­மார் முஸ்­லிம்­களை வடக்­கில் தங்­க­வைப்­போம் – சிவாஜிலிங்கம்

கல்­கி­சைப் பகு­தி­யில் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த மியன்­மார் முஸ்­லிம் அக­தி­கள் பௌத்த தீவி­ர­வா­தி­க­ளால் தாக்­கப்­பட்­டுள்­ள­னர். இதனை வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றோம். அதே­நே­ரம் அவர்­களை வடக்­கில் தற்­கா­லி­க­மா­கத் தங்­க­வைக்க நாம் தயா­ராக உள்­ளோம்.

இவ்­வாறு வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் .எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார்.
வடக்கு மாகா­ண­ச­பை­யின் 106ஆவது அமர்வு கைத­டி­யில் உள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் அவைத்­த­லை­வர் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது.

இந்த அமர்­வில் சிறப்பு விட­ய­மாக சபை­யில் சிவா­ஜி­லிங்­கம் மேலும் தெரி­வித்­த­தா­வது:
காங்­கே­சன்­துறை கடற்­ப­ரப்­பில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்த மியன்­மார் அக­தி­கள் சிலரை இலங்­கைக் கடற்­ப­டை­யி­னர் கைது செய்­தி­ருந்­த­னர். பின்­னர் அவர்­கள் மல்­லா­கம் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

பின்­னர் அவர்­கள் ஐக்­கிய நாடு­கள் சபை­யின் அலு­வ­ல­கத்­தின் ஊடாக கல்­கி­சை­யில் தங்­க­வைக்­கப்­பட்டி­ருந்­த­னர்.

இந்த நிலை­யில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் அங்கு சென்ற சில பௌத்த தீவி­ர­வா­தி­கள் அந்த முஸ்­லிம் மக்­களைத் தாக்­கி­யுள்­ள­னர். அவர்­களை அங்­கி­ருந்து வெளி­யே­று­மா­றும் அட்­ட­கா­சம் செய்­துள்­ள­னர்.

பௌத்த தீவி­ர­வா­தி­க­ளின் இந்த கொடூ­ர­மான செயலை வடக்கு மாகா­ண­சபை கண்­டிக்­கின்­றது. கல்­கி­சை­யில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து மியன்­மார் முஸ்­லிம் மக்­க­ளை­யும் வடக்கு மாகா­ண­சபை பொறுப்­பேற்று அவர்­களை எமது மண்­ணில் தங்­க­வைக்க நாம் தயா­ராக இருக்­கின்­றோம் – என்­றார்.

இதன்­போது, ஒரு­சில பௌத்த பேரி­ன­வா­தி­கள் நடந்­து­கொண்­ட­மையை வைத்து அனை­வ­ரை­யும் குறை­யா­கச் சொல்­ல­வேண்­டாம் என்று வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் ஜெய­தி­லக கூறி­னார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்