தனி நாட்டிற்கான குர்திஸ்தானின் பொதுவாக்கெடுப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை

ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க வடபகுதி, குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் பகுதியை குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடாக அறிவிக்கும்படி குர்து மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

குர்திஸ்தான் சுதந்திர நாடு கோரி கடந்த திங்கட்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 92 சதவீத மக்கள் தனி நாட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் ஆனால் குர்திஸ்தான் பொதுவாக்கெடுப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

“வாக்கெடுப்பும், முடிவும் சட்டபூர்வமானவை அல்ல. ஒரு ஐக்கிய, கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் வளமான ஈராக்கை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம். அங்கு அமைதியை நிலைநாட்டவும், குரல் குற்றச்சாட்டுகள் மற்றும் பரஸ்பர நடவடிக்கைகள் மீதான அச்சுறுத்தல்களை முடித்து வைக்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்”, எனவும் அவர் கூறியுள்ளார்.

குர்திஸ்தான் பொதுவாக்கெடுப்பிற்கு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
அண்மையில் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கு குர்திஸ்தான் பிராந்திய மக்கள் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி அமோக ஆதரவைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில்
இலங்கைக்கு பயணம்மேற்கொண்டுள்ள ஐநாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை விசேட நிபுணர் பப்லு டி கிரீப் இன்று
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலர் தோமஸ் சானொனை, சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*