தமிழகத்தில் அதிமுக, திமுக, மத்தியில் காங்கிரஸ், பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள்: விஜயகாந்த்

இந்தியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் தமிழகம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுகவின் 12ஆவது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர், விஜயகாந்த் தேமுதிகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் சுதீஷ் உட்பட 4 பேர் தேமுதிகவின் துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், இந்தியா நன்றாக இருக்க வேண்டுமெனில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் அதேபோல், தமிழகம் நன்றாக இருக்க வேண்டுமெனில் திமுக, அதிமுகவிற்கு வாக்களிக்க கூடாது என்றும் கூறினார்.

மேலும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பின்னர், நீட் தேர்வு கொண்டு வந்தால், தேமுதிக ஆதரிக்கும் என்று தெரிவித்த விஜயகாந்த், தினமும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் போராட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்