யாழில் ஹர்த்தாலா?

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக யாழ் நகரில் மக்கள் வழமை போன்று தத்தமது கடமைகளில் ஈடுபட்டு வருவதனை காண முடிவதாகவும், போக்குவரத்து சேவைகள் வழமைபோன்று இடம்பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் வர்த்த நிலையங்கள் வழமை போன்று திறக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் கல்வி நிலையங்கள் வழமை போன்று இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.நகரில் மக்கள் கூடும் இடங்களில் யாழ்ப்பாண பெண்கள் அமைப்பினர் மற்றும் தீவக மக்கள் என பெயர் குறிப்பிட்டு இன்றைய தினம்(29.09.2017) ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை காப்பாற்ற உதவியோருக்கு தண்டனை வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் நேற்று யாழில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

குறிப்பாக இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுடைய புகைப்படத்தை காட்சிப்படுத்தியே இந்த சுவரோட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் செயற்படும் மகளிர் அமைப்புக்களிடம் கேட்ட போது, தாம் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்