காணாமல் போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்படவுள்ள 7பேரில் 4பேர் தமிழர்களாக இருக்க வேண்டும்!

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்படவுள்ள 7பேரில் 4பேர் தமிழர்களாக இருக்க வேண்டும் அத்துடன் எமது பிரச்சணைகள் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் என காணாமல் போனோரின் உறவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்தனர்.

மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள கூட்டமைப்பின் தலைவரை அங்கு வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல்போன உறவுகள் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். இச் சந்திப்பின்போதே காணாமல் போனோரின் உறவுகள் குறித்த கோரிக்கையினை முன் வைத்தனர்.

இச் சந்திப்புத் தொடர்பில் மேலும் தெரிய வருவது ,

காணாமல் போனோர் விடயத்தில் உருவாக்கப்பட்ட சட்டமூலத்தின் பிரகாரம் உருவாகும் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு 7பேர் நியமிக்கப்படவுள்ள நிலையில் அதில் 4பேர் தமிழர்களாக இருக்க வேண்டும். அத்துடன் கொழும்பில் அமையும் அலுவலகத்திற்கு உள்ள அதிகாரத்தை ஒத்த ஓர் அலுவலகம் வடக்கிலும் அமையப் பெறவேண்டும்.

இதேநேரம் எமது இப் பிரச்சணைகள் தொடர்பிலும் எமது நிலமைகள் தொடர்பிலும் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு கூட்டமைப்பின் தலைவர் ஏற்பாடு செய்து தரவேண்டும். போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.

குறித்த விடயங்களிற்குப் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதிலளிக்கும்போது ,

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு 4 தமிழர்களை நியமிக்கும் விடயம் மற்றும் கொழும்பில் அமையும் அலுவலகத்திற்கு உள்ள அதிகாரத்தை ஒத்த ஓர் அலுவலகம் வடக்கிலும் அமையப் பெறவேண்டும் என்பவை தொடர்பில் விரைவில் பேசி பதிலளிக்கப்படும். அதேநேரம் ஜனாதிபதியை சந்திப்பதற்கு எத்தனை பேர் அவர்கள் யார் ? யார் ? எனப் பெயர்ப் பட்டியலைத் தயாரித்து வழங்கினால் அதற்கான ஏற்பாட்டினையும் செய்து வழங்குவதாகப் பதிலளித்தார்.

மறுமொழி இடவும்