தேர்தல்களின் போது அரசியல்வாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி குறித்து கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான யோசனை ஒன்றை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃபரல் முன்வைத்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி தேர்தல் பிரசாரத்துக்காக வேட்பாளர்கள் பிரத்தியேகமாக வங்கிக் கணக்கை பேண வேண்டும்.
இதன்கீழ் நன்கொடைகள், வெளிநாட்டு நிதி உள்ளிட்ட பல நிதி பரிமாற்றங்கள் குறித்து கண்காணிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் மாத்திரம் இன்றி, பொதுவாக நாட்டின் பல கட்சிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.