ஜப்பானுக்கு பறந்த மகிந்த – காரணம் என்ன தெரியுமா?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று திடீரென ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் பத்து நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே மகிந்த ராஜபக்ச ஜப்பான் சென்றுள்ளார். இதன்போது, அவருக்கு சிறிய அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டில் மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

கடந்தமுறை ஜப்பான் சென்றிருந்த போது தொண்டை நோய் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

எனினும், இந்த தொண்டை நோய் சிறியதே என்றும், வரப் போகும் உள்ளூராட்சித் தேர்தல்களில் பரப்புரை செய்வதற்கு தனது உடல்நிலை வலுவாக இருக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்