எமக்கு வாக்களியுங்கள் காணாமல் போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் -யாழில் பசில்

இடம்பெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று காணாமல்போனோர் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என சிறீலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை என்றுமே வழங்கப்போவதில்லை. எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களைக் கூட இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.

எமது ஆட்சிக் காலத்திலேதான் மக்களுக்கு நிம்மதியான வாழ்வினைக் கொடுத்தோம். இடம்பெயர்ந்த மக்களைக் குடியேற்றினோம். ஆனால் இந்த அரசாங்கம் மீள்குடியேறிய மக்களது தேவைகளை இன்னும் பூர்த்தி செய்து கொடுக்கவில்லை.

வீதி அபிவிருத்தி, இரயில் பாதை அமைப்பு, வடக்கின் வசந்தம் போன்றவற்றால் மக்களுக்குப் பல அபிவிருத்திகள் ஏற்படுத்தப்பட்டன.

தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் தயாராக இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இருக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்போம்” என பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்