புலிகள் காலத்தில் காணப்பட்ட தன்னிறைவுப் பொருளாதாரம் இன்றில்லை! – அனந்தி சசிதரன்

புலிகள் காலத்தில் காணப்பட்ட தன்னிறைவுப்பொருளாதாரம் இன்று இல்லாமல் போயுள்ளமையே எமது சமூகம் பொருளாதார ரீதியில் எதிர்கொண்டுவரும் சவால்களுக்கு காரணமாகுமென, தொழில்துறை ஆராய்சி மற்றும் அபிவிருத்தி குழுமத்தின் (ஐசுனுபு) பிரதம நிறைவேற்று அதிகாரி தலைமையிலான குழுவினருடனான சந்திப்பின்போது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சிசதரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

எமது சமூகம் தற்போது எதிர்கொண்டுவரும் பொருளாதாரப் பிரச்சினைகளின் அடிப்படைக் காரணங்கள் குறித்தும் அதிலிருந்து எவ்வாறு எமது மக்களை மீட்டெடுப்பது என்பது குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ள தொழில்துறை ஆராய்சி மற்றும் அபிவிருத்தி குழுமத்தினர் (ஐசுனுபு) அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களைச் சந்தித்து கடந்துரையாடல் நடத்தியிருந்தனர்.

மகளிர் விவகார அமைச்சரின் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29-09-2017) அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அவர்களின் ஆய்வு குறித்து விளக்கிக்கூறியதுடன் அதனை நடைமுறைப்படுத்தி எமது மக்களை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஒத்துழைப்பினை வழங்குமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இவ்விடயத்தினை வட மாகாண முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்குரிய வழிவகைகள் குறித்து ஆராய்வதாக அவர்களிடம் தெரிவித்திருந்தார் மகளிர் விவகார அமைச்சர அனந்தி சசிதரன் அவர்கள்.

 

 

 

 

 

 

 

தொடர்டர்புடைய செய்திகள்
ஜெனிவா அமர்வில் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்ரின்ட் ரூடோ அவர்கள் உறுதி தெரிவித்துள்ளமைக்கு நெஞ்சார்ந்த
தமிழினப் படுகொலை நடத்தியவர்களை பாதுகாக்கும் இலங்கை ஜனாதிபதி ஊழல் மோசடிகளுக்கு எதிராக வாளைச் சுழற்றுவதானது உண்மையில் விந்தையாக உள்ளது என
ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்தேச்சியாக இருந்துவரும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை வாசகத்தின் வழியே 2018 தை பிறப்புடன்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*