பிரான்ஸ் ரயில் நிலைய தாக்குதலில் இரு பெண்கள் பலி !!

தெற்கு பிரான்ஸின் மார்சே நகரின் புனித சார்லஸ் ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதலில் இருவர் இறந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் ரயில் நிலைய தாக்குதலில் இரு பெண்கள் பலி !!

இருவர் இந்தத் தாக்குதலில் கத்தியால் குத்தப்பட்டு இறந்தனர் என்று, அந்த பகுதியில் காவல் அதிகாரி ஆலிவர் டீ மேசியார்ஸ், ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கத்தியால் பிறர் மீது தாக்குதல் நடத்தியவரை, பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெர்ரா கோலோங் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைவதாக தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ரயில் நிலைய தாக்குதலில் இரு பெண்கள் பலி !!

பிரான்ஸ் தேசிய காவல்துறையின் டுவிட்டர் பதிவில், ரயில் நிலையத்தில் நிலைமை சரிசெய்யப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தியவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறும் அந்த டுவிட்டர் பதிவின் மூலம் மக்களிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பெயர் வெளியிடாத காவல் துறை அதிகாரி, பிரான்ஸின் ஊடகமொன்றில் பேசுகையில், தாக்குதல் நடத்தியவர், அல்லாஃ அக்பர் (கடவுளே உயந்தவர்) என உரக்கத் தெரிவித்ததாகக் கூறினார்.

இறந்த இருவருமே பெண்கள் என்றும், ஒருவர் கழுத்து அறுபட்டும், மற்றொருவர் கத்தியால் குத்தப்பட்டும் இறந்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்