இடைக்கால அறிக்கை தொடர்பில் புரிந்துணர்வு இல்லையாம்!- மாவை

இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில், புரிந்துணர்வின்றி பலர் தவறாக பேசுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற, இலங்கை தமிழரசுக் கட்சியின் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிர்ப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்.

”எங்களின் இனத்தின் விடுதலைக்காகவும், எம் தேசத்தின் விடுதலைக்காகவும் நடைபெற்ற நீண்ட கால போராட்டங்களுக்கு பின், கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்திலே அரசியல் தீர்வுக்கான இடைக்கால அறிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த அறிக்கை தொடர்பில் சரியான புரிதல் இன்றி சிலர் தவறான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்நிலையில், குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பில், பலரது கருத்துக்களை கேட்டு இதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்