அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 50 பேர் பலி

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் மேண்டலே பே ஓட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்த போது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அமெரிக்க நேரப்படி இரவு 10:30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு தொடங்கியது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மக்கள் அலறியடித்து ஓடினர். இதில் இருவர் உயிரிழந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12-க்கும் அதிகமானோர் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெரும் பதற்றம் நிலவுகிறது. 30 மாடி உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, அப்பகுதியை பொதுமக்கள் யாரும் அணுகவேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இசை நிகழ்ச்சி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டான் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அருகில் உள்ள மெக்கரன் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டு உள்ளது. போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ள ஓட்டலில் அதிக முறை துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

பாதுகாப்பு அங்கு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளநிலையில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது எனவும் 200 பேர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் பின்னர் தெரிவிக்கபட்டது. தற்போது இந்த் எண்ணைக்கி 50 ஆக உயர்ந்து உள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தீவிரவாதிகள் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகமும் வலுத்து உள்ளது. போலீசார் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். விசாரணையும் தொடங்கியும் நடைபெற்று வருகிறது, சோதனையும் நடக்கிறதாக தெரிவிக்கப்படுகிறது. நகரை நோக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. விமான நிலைய சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய
ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்திபனின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*