தனிக்கட்சி தொடங்கவுள்ள தினகரன்?

தனிக் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் டிடிவி தினகரன் ஈடுபட்டு வருவது போல் தெரிகிறது என்று குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமசந்திரன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே அதிகார போட்டி அதிகமாகி விட்டது. இதனால் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நீக்கி உத்தரவிட்டு வந்தார்.

தன்னை எதிர்த்து பேசுபவர்களின் பதவிகளை பறித்து வந்த தினகரன், ஒரு கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவியை பறித்தார். இந்நிலையில் எடப்பாடி தலைமையில் பொதுக் குழு கூட்டி சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்ததை தினகரனால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதுகுறித்து அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூரில் குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கூறுகையில், தனிக் கட்சி தொடங்க ஆயத்தமாகிறார் டிடிவி தினகரன்.

ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்கியதில் இருந்தே அவரது தனிக்கட்சிக்கான அறிகுறி தெரியவந்துள்ளது. சசிகலாவையும், தினகரனையும் சேர்த்துக் கொண்டால் எடப்பாடியின் ஆட்சி நல்ல ஆட்சி. இல்லாவிட்டால் கெட்ட ஆட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்