புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடும் ராணுவத்தினர்!

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பச்சை புல்மோட்டை பகுதியில் இன்று தமிழீழ விடுதலை புலிகளால் புதைக்க பட்ட ஆயுதங்களை தேடி பொலிசார் மற்றும் இராணுவத்தினரால் அகழ்வு பணிகள மேற்கொள்ளபட்டன.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் நிலஅகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு நிதிமன்றம் அனுமதி பெறப்பட்டு இந்த அகழ்வு பணிகள் மேற்கொள்ள பட்டன.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்சுதீன் முன்னிலையில் மாலை மூன்று மணி தொடக்கம் இராணுவம் ,விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் இணைந்து கனரக வாகனங்களின் உதவியுடன் இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த அகழ்வுப் பணிகள் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமாகி தொடர்ந்து மூன்றுமணி நேரங்களுக்கும் மேலாக அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வு நடவடிக்கை இடையில் நிறுத்த பட்டது.

 

About இலக்கியன்

மறுமொழி இடவும்