ஆஸ்திரியாவில் பர்தா அணிய தடை

ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள், முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிவதற்கான தடை நடைமுறைக்கு வந்தது.

ஆயுததாரிகளின் தாக்குதல்கள், ஆஸ்திரியாவின் கோட்பாடுகள், ஆஸ்திரியாவின் தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இஸ்லாமியப் பெண்கள் முகத்திரை அணிவதற்குத் தடை விதிப்பது தொடர்பில் ஆஸ்திரிய அரசு பரிசீலித்து வந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முகம் முதல் தாடை வரை மறைத்தல் கூடாது என்று அந்தச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம், வளைகுடா நாடுகளில் இருந்து, ஆஸ்திரியாவிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.

தொடர்டர்புடைய செய்திகள்
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானிய ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சி படையினர் கடந்த இரண்டு வருடங்களாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு
தனக்கு உட்­பட்ட கட்­ட­லோ­னிய அர­சைக் கலைத்­து­விட்டு மீண்­டும் தேர்­தல் நடத்த ஸ்பெய்ன் அரசு திட்­மிட்­டுள்ள நிலை­யில், இந்த முடி­வுக்கு எதிர்ப்­புத்
ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்பகுதியான காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 43

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*