விக்னேஸ்வரனின் பதவியை பறிக்க அமெரிக்காவிடம் உதவி கோரிய சுமந்திரன்!

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றிவிட்டு அவருக்குப் பதிலாக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒருவரை முதலமைச்சராகக் கொண்டுவரவேண்டுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முறையிட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பில்,

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடும்போக்குடன் செயற்படுவதால், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது எனவும், அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் போட்டியிடுவதற்கு அனுமதிக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்குச் சென்ற நாடாளுமன்றக் குழுவில் சுமந்திரனும் சென்றுள்ளதுடன் அவர் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்து சமகால அரசியல் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைத்து பணியாற்றக்கூடிய முறையில் வடமாகாண முதைலமைச்சர் செயற்பட வேண்டும் என்றும் அதற்கேற்ப அமெரிக்கா ஒத்துழைப்பு வழக்க வேண்டும் எனவும் சுமந்திரன் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அடுத்த வடமாகாணசபைத் தேர்தலில், முன்னாள் நிதியரசர் ஸ்ரீபவன், தற்போதைய அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோரில் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது தொடர்பிலும் அவர் கலந்துரையாடல்களை நடத்திவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்