நடராஜனை சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரித்தார்.

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும், நடராஜனை சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரித்தார்.

கல்லீரல், நுரையீரல், கிட்னி ஆகிய உறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்காக அவர் காத்திருக்கிறார் என்றும், மருத்துவனை நிர்வாகம் தகவல்களை வெளியிட்டு வந்தது. நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்ற வைகோ, நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், நடராஜனுக்கு இன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக வைகோ தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்