யாழ் பல்கலையில் மாபெரும் போராட்டம்!

தமிழ் அரசியல் அரசியல் கைதிகள் சகலரையும் உடனடியாக கால தாமதம் இன்றி விடுவிக்க கோரியும், நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்தியும் வவுனியா நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ் தலைமைகள் இந்த விடயத்தில் மௌனம் காக்காது அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தை யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கம், ஆசிரியர் சங்கம், ஊழியர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்தில் பல்கலைக்கழகம் சாராத வெளி அமைப்புக்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தன. தமிழ் அரசியல் கைதிகளது உறவினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். யாழ்.பல்கலை முன்றலில் பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக காலை பத்துமணியளவில் பல்கலை வளாகத்திற்குள் ஒன்று கூடிய மாணவர்கள் பேரணியாக பிரதான வாயிலை வந்தடைந்து அங்கிருந்து, விஞ்ஞான பீட வாயில் வழியாக சென்று மீண்டும் பல்கலை வளாகத்தில் ஒன்று கூடி அங்கு உரைகள் நடைபெற்ற பின்னர் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.  

About இலக்கியன்

மறுமொழி இடவும்