முதலமைச்சர் விக்கியை இன்று சந்திக்கிறார் பிரிட்டிஷ் அமைச்சர்!

இலங்கை வந்துள்ள ஆசிய – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் இன்று வடக்குக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இதன் போது பிரிட்டனின் உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை அவர் பார்வையிடவுள்ளார்.

கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேறிய மக்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து வடக்கின் நிலைமைகள் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்