முன்னாள் போராளிகள் சிறீலங்கா ஜனாதிபதிக்கு கடிதம்

சமூகத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் அனைத்தும் தம்மீது சுமத்தப்படுவதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சங்கத்தினரால் சிறீலங்கா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் எந்தவொரு முன்னாள் போராளிகளும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை என சிறீலங்கா ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வாழ்வாதாரமின்றி தவிக்கும் சுமார் 15000 முன்னாள் போராளிகளில் பலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தமது வாழ்வின் நலனுக்காக சிறீலங்கா ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட வேண்டும் எனவும் அதற்கான அனுமதியை வழங்குமாறும் முன்னாள் போராளிகள் மைத்திரிக்கு அனுப்பியுள்ள கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*