தீர்­வுக்­கான சந்­தர்ப்­பத்தை கைந­ழு­வ­வி­ட­மாட்­டோம் – மாவை

நாம் கொள்­கை­யி­லி­ருந்து வில­க­வும்­ மாட்டோம். அதே நேரம் அர­சி­யல் தீர்­வுக்­காக கிடைத்­துள்ள சந்­தர்ப்பத்தையும் நழுவ விட­வும்மாட்­டோம்” என்று இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

உத­ய­வாழ்வு மற்­றும் சர­வ­ண­ப­வன் அறக்­கட்­ட­ளை­யின் பயி­லு­னர்­க­ளுக்­கான சான்­றி­தழ்­கள் வழங்­கும் நிகழ்­வும் சாத­னை­யா­ளர்­கள் மதிப்­பு­றுத்­த­லும் வட்­டுக்­கோட்­டை­யில் உள்ள தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அலு­வ­ல­கத்­தில் திரு­மதி யசோதை சர­வ­ண­ப­வன் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது.

இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராசா மேலும் தெரி­வித்­த­தா­வது:

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான இடைக்­கால அறிக்­கை­யில் இணக்­கம் காணப்­பட்ட விட­யங்­கள் மற்­றும் இணக்­கம் காணப்­ப­டாத விட­யங்­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. வெளி­வந்­தி­ருப்­பது இடைக்­கால அறிக்கை மாத்­தி­ரமே. இன்­னும் முழு­மை­யான தீர்­வுத் திட்­டம் வர­வில்லை. அது விரை­வில் வர­வி­ருக்­கின்­றது.

இந்த ஆண்டு இறு­தி­யில் இலங்­கை­யில் பல மாற்­றங்­கள் நிக­ழ­வுள்­ளன. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்­கான சந்­தர்­பத்தை உரு­வாக்­கி­யுள்­ளோம். அதனை நாம் தவ­ற­வி­டக் கூடாது. சில விட­யங்­களை மாத்­தி­ரம் வைத்து ஒட்­டு­மொத்த தீர்­வை­யும், நன்­மை­க­ளை­யும் எழுந்­த­மா­ன­மாக நாம் நிரா­க­ரிக்­கக் கூடாது. இடைக்­கால அறிக்கை தொடர்­பில் விமர்­ச­னங்­களை முன்­வைக்க வேண்­டாம் என்று கூற­வில்லை.

நாம் இலக்கை நோக்­கிப் பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம். அந்த இலக்கை அடை­வ­தற்­காக நாம் பல ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­களை இழந்­தி­ருக்­கின்­றோம். அந்த ஆத்­மாக்­கள் உலா­வு­கின்ற இந்­தத் தேசத்­தில் அர­சி­யல் தீர்­வைப் பெற்­றுக் கொள்­ளும் சந்­தர்­பத்தை நாம் தவ­ற­விட முடி­யாது – என்­றார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்