அரசியல் கைதிகளின் விடுதலைகோரி கவனயீர்ப்புப் போராட்டம்

சிறை­க­ளில் தடுத்­து ­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து அர­சி­யல் கைதி­க­ளை­யும் எந்­த­வித நிபந்­த­னை­யு மின்றி உட­ன­டி­யாக விடு­விக்க வலி­யு­றுத்தி எதிர்­வ­ரும் 9ஆம் திகதி திங்­கட் கி­ழமை முற்பகல் 10 மணிக்கு வவு­னியா மையப் பேருந்து நிலை­யம் முன்­பாக மாபெ­ரும் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்படவுள்ளது.

வவு­னியா மாவட்ட பொது அமைப்­பு­கள் ஒன்­றி­ணைந்து இந்த போராட்­டத்தை ஒழுங்­க­மைத்­துள்­ளன.

வவு­னியா மாவட்ட பொது அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள், தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தனை அவ­ரது இல்­லத்­தில் நேற்று மாலை 3 மணி­ய­ள­வில் சந்­தித்­தனர்.

சந்­திப்­பில் வவு­னியா மாவட்ட வர்த்­த­கர் சங்­கம், சமூக அமைப்­புக்­கள், தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர்­கள் சங்­கம், மக­ளிர் அமைப்­புக்­கள், கிராம அமைப்­புக்­கள் என 20இக்­கும் மேற்­பட்ட பொது அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் கலந்து கொண்­ட­னர்.

வவு­னியா மாவட்ட பொது அமைப்­புக்­கள் ஒரு அவ­சர சந்­திப்பு ஒன்றை இன்று (நேற்று) ஒழுங்­க­மைத்­தன.

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் அர­சி­யல் கைதி­கள் மூவர் கடந்த 11 நாள்­க­ளாக உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு எதி­ரான வழக்கு வவு­னியா மேல் நீதி­மன்­றி­லி­ருந்து அநுரா­த­பும் மேல் நீதி­மன்­றுக்கு மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

அத­னால் மொழி உள்­பட பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுப்­ப­தா­க­வும் தமக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணையை மீண்­டும் வவு­னியா மேல் நீதி­மன்­றி­லேயே நடத்­தப்­ப­ட ­வேண்­டும் என்­பதை வலி­ய­றுத்­தி­யுமே அவர்­கள் தொடர் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

சிறை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, காணா­மற்­போ­னோர் விவ­கா­ரம் மற்­றும் காணி­கள் விடு­விப்பு உள்­ளிட்ட தமிழ் மக்­க­ளு­டைய அர­சி­யல் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக வவு­னியா மாவட்­டத்­தில் பொது அமைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தாக இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின்­போது தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது.

எதிர்­கா­லத்­தில் தமிழ் மக்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய பல்­வே­று­பட்ட நடை­முறை ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை வலி­யு­றுத்­திய போராட்­டங்­களை வெறு­ம­னவே ஓர் கட்சி சார்பு இல்­லா­மல் ஒட்­டு­மொத்­த­மான பொது அமைப்­புக்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய அமைப்பு ஒன்­றின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­ப­டும்.

இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் தெரி­வித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்