நிபந்தனையுடன் பரோலில் வெளியில் வருகிறார் சசிகலா

பரோலில் வெளியே வரும் சசிகலா அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என சிறைத்துறை நிர்வாகம் நிபந்தனை விதித்து உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பிப்ரவரியில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக 15 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கேட்டு சசிகலா சார்பில் சிறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. பரோல் தொடர்பான வழக்கமான விசாரணை, நடைமுறைகள் முடிந்ததும் 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு உள்ளது.

பரோலில் வெளியே வரும் சசிகலா அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என சிறைத்துறை நிர்வாகம் நிபந்தனை விதித்து உள்ளது.

ஊடகங்களை சந்திக்கக்கூடாது என சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை நிபந்தனை விதித்து உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே சென்னை தியாகராயநகரில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் சசிகலா தங்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பரோல் கிடைத்துள்ளதால் சிறிது நேரத்தில் சிறையில் இருந்து சசிகலா வெளியே வருகிறார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஜெனிவா அமர்வில் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்ரின்ட் ரூடோ அவர்கள் உறுதி தெரிவித்துள்ளமைக்கு நெஞ்சார்ந்த
தமிழினப் படுகொலை நடத்தியவர்களை பாதுகாக்கும் இலங்கை ஜனாதிபதி ஊழல் மோசடிகளுக்கு எதிராக வாளைச் சுழற்றுவதானது உண்மையில் விந்தையாக உள்ளது என
ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்தேச்சியாக இருந்துவரும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை வாசகத்தின் வழியே 2018 தை பிறப்புடன்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*