பதவி விலகினார் வட மாகாண சபை உறுப்பினர் றிவ்கான் பதியுதீன்

வட மாகாண சபை உறுப்பினர் றிவ்கான் பதியூதீன் தமது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

வட மாகாண சபையின் 107 ஆவது அமர்வு தற்போது இடம்பெற்று வரும் நிலையில் அவர் தனது பதவி விலகளை அறிவித்துள்ளார்.

தமது பதவி விலகள் தொடர்பான கடிதத்தை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் இன்று கையளித்தாக றிவ்கான் பதியூதீன் தெரிவித்தார்.

தன்னுடைய இடத்திற்கு தங்களது கட்சியில் போட்டியிட்டு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ள ஒருவரை நியமிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

இனமத பேதங்களின்றி தான் செயற்பட்டதாகவும் அதே போன்று முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு காணிப் பிரச்சனை முதல் அனைத்துப் பிரச்சைகளுக்கும் சுமூகமான தீர்வை பெற்று கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்