முன்னாள் போராளியை மிரட்டிய காவல்துறை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவரின் ஹோட்டலுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற ஐந்து இலங்கை காவல்துறையினர் அங்கு பணி புரிந்துகொண்டிருந்த வயோதிபரை தாக்கியதோடு ஹோட்டல் உரிமையாளரையும் அச்சுறுத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான வயோதிபர் சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி ஹோட்டலின் மது விற்பனை நிலையம் பூட்டப்பட்டு அருகில் இருந்த ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதன் போது அங்கு சிவில் உடையில் வந்த காவல்துறையினர் மதுபானம் தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஹோட்டலின் உரிமையாளர் யாழ்.பிராந்திய மனிதவுரிமை ஆணைக்குழுவின் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டினை முன்னாள் போராளியான சு.நிதிகேசன் பதிவு செய்ள்ளார். மேலும் முன்னாள் போராளி என்பதனை காரணம் காட்டியே தான் இவ்வாறு அச்சுறுத்தப்படுவதாகவும், இதற்கு முன்னரும் இரு தடவைகள் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மனிதவுரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு காவல்துறை மிரட்டிவருவதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்