5 நாட்களுக்கு பரோல் – சென்னை வந்தடைந்த சசிகலா!

5 நாட்கள் பரோலில் வெளியே வந்த சசிகலா காரிலேயே சென்னை சென்றடைந்தார்.

சுமார் 3.15 மணியளவில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே காலடி எடுத்து வைத்தார் சசிகலா. வீடியோக்களில் அவர் சிக்காமல் இருக்க சிறை வாசலிலேயே காரை கொண்டுவந்துவிட்டு மீடியாக்கள் பார்வையிலிருந்து தப்பிக்க வைத்தனர் அவர் ஆதரவாளர்கள்.

இருப்பினும் கார் நகர்ந்து வந்த பிறகு, வீடியோவில் சசிகலா காருக்குள் அமர்ந்திருந்த காட்சிகள் சிக்கின. பச்சை நிற சேலையில் சசிகலா காணப்பட்டார். கார், ஒசூர், வேலூர் வழியாக சென்னை பயணித்தது. காரின் இரு பக்கத்திலும், பாதுகாவலர்கள் இருவர் நின்றபடி பயணித்தனர்.

கார் இரவு 8.20 மணியளவில் சென்னையை சென்று சேர்ந்தது. முன்னதாக, வாலாஜாபேட்டை அருகே சற்று நேரம் கார் நிறுத்தப்பட்டு, அங்குள்ள பிரபல ஹோட்டலில் சசிகலா காபி சாப்பிட்டார்.

சென்னை பூந்தமல்லி வந்த சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா தங்க உள்ள தி.நகர் இளவரசி வீட்டை சுற்றிலும் தொண்டர்கள் குவிந்து வரவேற்பு அளித்தனர். மலர் தூவியும், வாழ்த்து கோஷம் எழுப்பியும் வரவேற்பு தெரிவித்தனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்