முல்லைத்தீவு மீனவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு கொக்குளாய் கடற்பரப்பில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றுமாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 04.10.17 அன்று இரவு கொக்குளாய் கடற்பரப்பில் படகு ஒன்றுடன் தொழிலுக்கு சென்ற சிறீபுரம் பதவியா வெலிஓயா பிரதேசத்தினை சேர்ந்த 32 அகவையுடைய ஜெயசூரிய ஆரச்சிகே சம்பத்குமார என்ற கடற்தொழிலாளி படகு ஒன்றில் கடற்தொழிலுக்கு சென்றுள்ளார்.இவரது படகு 05-10-17 அன்று கொக்குளாய் கடற்பரப்பில் கரை ஒதுங்கியிருந்தது.

இந்த நிலையில் கடற்படையினரின் உதவியுடன் மீனவர்கள் இணைந்து இவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்