பிரபாகரனாக இருந்தாலும் பில்கேட்ஸ் ஆக இருந்தாலும் ஆசிரியர்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தியிருப்பார்கள்! சண்.குகவரதன்!

பிரபாகரனாக இருந்தாலும் பில்கேட்ஸ் ஆக இருந்தாலும் தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தியிருப்பார்கள் என மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற அப்பாடசாலையின் ஓய்வு நிலை ஆசிரியர்களது ஒன்றுகூடல் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய போதே சண்.குகவரதன் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், துட்டகைமுனு மன்னனும் ஒரு ஆசானிடம்தான் கல்வி பயின்றிருப்பான். எல்லாளனும் ஒரு ஆசானிடம்தான் கல்வி பயின்றிருப்பான். கிட்லர் ஆக இருந்தாலும், பில்கேட்ஸ் ஆக இருந்தாலும், அம்பானியாக இருந்தாலும், பிரபாகரனாக இருந்தாலும் தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்குச் சிரம்தாழ்த்தி மரியாதை செலுத்தியிருப்பார்கள். இதுதான் ஆசிரியர் தொழிலின் மகத்துவம் என்று கூறியிருந்தார்.

ஈழதேசம் இணையம்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்