தமிழ்ப் பெண்களிடம் அநாகரிகமாக நடந்தமையின் எதிரொலி; மட்டக்களப்பில் உணவகம் இளைஞர்களால் உடைப்பு!

மட்டக்களப்பில் உள்ள உணவகம் ஒன்று அங்கு சென்ற தமிழ்ப் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதால் இளைஞர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது…

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள பெற்றோலியக் கூட்டுதாபனத்திற்கு முன்பாக அமைந்துள்ள இசுலாமியருக்குச் சொந்தமான உணவகத்திற்கு சாப்பாடு வாங்குவதற்காகச் சென்ற தமிழ் பெண்களை கடையிலிருந்தவர்கள் தகாத வார்த்தைகளால் அவமதித்துள்ளார்கள்.

இது குறித்த தகவல் அறிந்து ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்கள் அக்கடையை அடித்து நொறுக்கியுள்ளார்கள். இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து சிறிலங்கா இராணுவப்புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

ஈழதேசம் இணையம்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்