முல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது காவல்துறையினர் தாக்குதல்!

முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் ஆற்று மணல் ஏற்றுவதற்காக சென்ற இளம் குடும்பஸ்தர் மீது சிவில் உடையில் சென்ற பொலிசார் மிக மோசமாக நடாத்திய தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

நேற்றையதினம் நண்பகல் வேளை மண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரத்துடன் மண் ஏற்றுவதற்காக உழவியந்திரத்தில் சென்ற குடும்பஸ்தரை குமுளமுனை ஆண்டான்குளம் பகுதியில் வைத்து இடைமறித்த சிவில் உடையில் சென்ற இருவர் தம்மை பொலிசார் என அடையாளப்டுத்தியதுடன் உழவியந்திர பெட்டியில் மண் எங்கே என கேட்டுள்ளனர். அதற்க்கு உழவியந்திரம் பழுதடைந்துள்ளதாகவும் அதனால் ஏற்றாது வீடு செல்வதாகவும் குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.

இதற்க்கு சிவில் உடையில் தம்மை பொலிசார் என அடையாளப்படுத்தி வருகைதந்தவர்கள் மண் ஏற்றுவதற்க்கான அனுமதிபத்திரம் மற்றும் ஏனைய ஆவணங்கள் பறிமுதல் செய்ததோடு மீண்டும் சென்று உழவியந்திரத்தில் மண் ஏற்றி வருமாறு கூறி மிக மோசமாக குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடத்தியதோடு நிலத்தில் தள்ளி விட்டு காலால் ஏறி மிதித்து தாக்குதல் நடாத்திவிட்டு சென்றுள்ளனர்.

தாக்குதலில் மிகவும் மோசமாக பாதிப்படைந்து வீதியில் கிடந்தவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு குடும்பத்தாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மனைவியால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு அவசர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர் சாதாரண வாட்டுக்கு மாற்ற பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்