பிரதமர் பதவியை ராஜபக்சர்களுக்கு வழங்கமாட்டேன் – மைத்திரி

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ச குடும்பத்திலுள்ள எவரையும் தனது ஆட்சியின் கீழ் பிரதமராக்குவதற்கு இடமளிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், மஹிந்த மற்றும் மைத்திரி தரப்பை இணைத்து கட்சியை மீண்டும் ஐக்கியப்படுத்துவதற்குரிய முயற்சியில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக இரு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுகளை நடத்தி வருகின்றனர்.

மைத்திரிபால சிறிசேன தனித்து ஆட்சியமைக்க விரும்பினால் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டித்தர தயார் என்றும், பிரதமர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என்றும் முன்வைக்கப்பட்ட திட்டத்தை மைத்திரி ஏற்கனவே நிராகரித்து விட்டார்.

இந்த நிலையிலேயே பிரதமர் பதவியை சமல் ராஜபக்சவுக்கு வழங்கினால் மகிந்த அணி சுதந்திரக் கட்சியில் இணையும் என்ற யோசனையை சமரசக் குழு மைத்திரியிடம் முன்வைத்தது.

இதையே சிறீலங்கா ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு வெற்றிகரமான தலைமைத்துவத்தை வழங்கத் தான் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்