எவ்வளவு குறுகிய காலத்தில் தாயகத்தை மீட்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச்செய்யவேண்டும் தீர்க்க தரிசனத்துடன் 89ல் உரைத்த தலைவர்

1989ல் முதல் மாவீரர் நாளை பிரகடனம் செய்து தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரையின் முன்னுணர்ந்த எண்ணப்பாடுகளின் முக்கியத்துவம் கருதி தருகின்றோம்.
தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ள விடயம்
எமது சமுகத்தில் தலைவர்களை மட்டுமே ஆராதிக்கும் அல்லது முன்னிலைப்படுத்தும் ஒரு குணம் உண்டு எனவே தான் எதிர்காலத்தில் அந்த விடயங்களை தவிர்க்கும் பொருட்டு விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த உயர் நிலை தளபதிகள் தொடக்கம் சாதாரண உறுப்பினர் வரை சமமாக அவர்களது அர்ப்பணிப்பு மதிக்கப்படவேண்டும் என்பதற்காக இந்த மாவீரர் நாளை இந்த ஆண்டு தொடக்கம் பிரகடனம் செய்து ஆண்டுதோறும் ஒரு நாளில் சகல மாவீரர்களையும் வணக்கம் செய்ய ஒழுங்குபடுத்தப்படுகின்றது.

https://youtu.be/6JqSY_7WfFo

இதுவரை நாம் 1307 மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றோம்.இந்த தியாகம் சிறீலங்கா படைகளுக்கு எதிராகவும் இந்திய படைகளுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட போராட்டத்தில் செய்யப்பட்டது.குறுகிய காலத்தில் நாம் ஒரு வளர்ச்சி நிலையை அடைய போராளிகளின் அர்ப்பணிப்பே காரணம்.பிரபாகரன் ஒரு தனி மனிதன் அல்ல அவர் ஒரு இனத்தின் பிரதிநிதி அவர் தனது கொள்கையில் இருந்து தவறினால் அவரும் சுட்டுக்கொல்லப்படவேண்டியவரே என குறிப்பிடுகின்றார்.
இந்தியா எமது மண்ணில் பல இயக்கங்களுக்கும் சம நேரத்தில் பயிற்சி அளித்தது ஆயுதங்களை எல்லோருக்கும் பகிர்ந்து வழங்கியது.இந்தியா தனக்கு சாதமற்றவர்களாக ஏதாவது இயக்கம் மாறுகின்றபோது ஒரு இயக்கத்தை கொண்டு மற்றைய இயக்கத்தை அழிப்பதே அவர்களது நோக்கம்.இந்தியா தந்த ஆயுதங்களுக்கு மேலாக நாம் அவர்களுக்கு தெரியாமல் ஆயுதங்களை கடத்தினோம்.அது எமக்கு அவசியமாக இருந்தது.அதே வேளையில் போராளிகளின் வீரச்செயல்களால் படைகளிடம் இருந்தும் ஆயுதங்களை பறித்தெடுத்தோம் இதன் மூலமே நாம் பலமடைந்தோம்.இவ்வாறான விடயங்களை கையாளத் தவறினால் நாம் அழிக்கப்பட்டுவிடுவோம்.

ரஸ்யர்கள் ஜேர்மானியர்களின் ஆக்கிரமிப்பு எதிராக போராடிபோது அவர்கள் அடைந்த உயிரிழப்பு 2கோடி
இஸ்ரேலில் போராட்டத்தின்போது கொடுத்த உயிர்கள் 60 இலட்சம்
ஆல்ஜீரியா விடுதலைப்போராட்டத்தில் ஒரு நாளில் 35 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள்.
எனத்தெரிவிக்கும் அவர்
எவ்வளவு குறுகிய காலத்தில் மண்ணை மீட்க முடியுமோ அவ்வளவு குறுகிய காலத்தில் அதை செய்வது எமது இனத்திற்கு நல்லது எனக் கூறுகின்றார்.
ஒரு தீவிர விடுதலைப்போராட்ட முனைப்பின்முன் எதிரிகள் கையாள்கின்ற சூத்திரங்கள் சமாதான பேச்சுவார்த்தை நல்லிணக்கப் பொறிமுறைகள் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் போன்றவையாக தலைப்பின் ஒரு விடுதலைப்போராட்டத்தை சிதைக்கும் என்பதையும் உரிமைக்காக போராடுகின்ற இனத்தில் கால இழுத்தடிப்புக்களை மேற்கொண்டு ஒரு கட்டமைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டு இனத்தின் விடுதலைவேட்கையை சிதறவைத்து அடிமைத்தனத்துள்ளேயே வாழும் நிலையை உருவாக்கும் என்பதையே முன்னுணர்ந்து அவர் தன்னுரையில் குறிப்பிடுகின்றார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்