நிறைய விட்டுக்கொடுத்துவிட்டோம், இனி ஒன்றும் விட்டுக்கொடுக்கமாட்டோமாம் – சுமந்திரன்

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களிலிருந்து நாம் ஏற்கனவே நிறைய விடயங்களை விட்டுக்கொடுத்துவிட்டோம் இனி ஓரங்குலம்கூட விட்டுக்கொடுக்கமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாம் நிறைய விடயங்களை விட்டுக்கொடுத்து கீழிறங்கி வந்துள்ளோம். இன்னும் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் மூன்றுவிடயங்கள் உள்ளன. அவை தொடர்பில் சாதகமான நிலை எட்டப்பட்டால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி வரைபை ஏற்றுக்கொள்ளும்.

வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும், மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மத்திய அரசாங்கத்தினால் மீளப் பெறப்படக்கூடாது, நிதி அதிகாரங்கள் மாகாணசபைக்கு முழுமையாக வழங்கப்படவேண்டும். ஆகிய மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு தெரிவிப்போம் எனத் தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
புதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, எதிர்வரும் 24ஆம் நாள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
வடக்கு – கிழக்கு இணைக்கப்படக்கூடாது என விரைவில் தமிழ் மக்கள் கோரிக்கை விடுப்பார்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
முள்ளிவாய்க்கல் நினைவேந்தலை தமிழரசுகட்சியின் நினைவேந்தல் நிகழ்வாக்கும் முயற்சியில் சிலர் மும்முரம் காட்டிவருவதாக சொல்லப்படுகின்றது. அவ்வகையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*