ஒதியமலை, பெரியகுளம் – நெடுங்கேணி பிரதான வீதி திருத்த வேலை நடைபெற்றுவருகின்றது. இந் நிலையில், பணியாளர்கள் வீதியின் இரு பக்கமும் மண்ணை அகழ்ந்து தமது திருத்தப் பணிகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மின் கம்பங்கள் கீழே சாய்ந்து விழும் அபாயம் உள்ளதாக அப்பகுதி அமைப்புகளும் மக்களும் ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.
கடந்த 22.09.2017 அன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத்தொடர்ந்து வீதி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளருடன் தொலைபேசியில் ரவிகரன் தொடர்புகொண்டு மக்களின் முறைப்பாட்டை அவருடைய கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
இது தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாக பணிப்பாளர் தெரிவித்ததாகவும் அறிய முடிகிறது. மேலும் ரவிகரன் அவர்கள் இது சம்பந்தமாக, அவருக்கு எழுத்து மூலம் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


