அரசியல் கைதிகளிற்காக போராட்டம்:தமிழரசு வெளியே!

தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தியும் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று திங்கட்கிழமை யாழ்.மத்திய பேரூந்துநிலையத்தினில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக திரண்ட நூற்றுக்கணக்கானவர்கள் இப்போராட்டத்தினில் பங்கெடுத்திருந்தனர்.

https://youtu.be/YdOAgawqaDM

தமிழ் தேசிய மக்கள் முன்னணி,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் அரசியல் கைதிகளது விடுதலைக்கான தேசிய அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்டிருந்தன.
இதனிடையே இப்போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தமிழரசுக்கட்சி நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்த போதும் அருந்தவபாலன் தவிர்ந்த வேறு எவரும் பிரசன்னமாகியிருக்கவில்லை.

குறிப்பாக நாளுக்கொரு அறிக்கைகள் விடும் வடமாகாணசபையின் அவைத்தலைவர் மற்றும் அமைச்சர்கள்,உறுப்பினர்களென எவரும் போராட்ட பகுதியினை எட்டிக்கூட பார்த்திருக்கவில்லை.

இதனிடையே அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் உள்ள அரசியல்கைதிகளின் வழக்கிற்கான சாட்சிகளிற்கு அச்சுறுத்தல் எனில் அவர்களிற்கு பாதுகாப்பை வழங்கியேனும் வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டுமேயன்றி அனுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றுவது தீர்வாகாது என்பதனை சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என தமிழ் அரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம.ஆ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாக கட்சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் நானாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் அனுராதபுரம் சிறையில் 3 அரசியல் கைதிகள் தொடர்ந்தும் 11 நாட்களாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு உணவு தவிர்ப்பில் உள்ள அரசியல்கைதிகள் கோருவது உடனடி விடுதலையல்ல . தமக்கான வழக்கினை தமக்கும் புரியும் மொழி பாவனையில் உள்ளது தம்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிகழ்ந்த்தாக கூறப்படும் பிரதேசத்திற்கான நீதிமன்றில் குறித்த வழக்கினை நடாத்துமாறே கோருகின்றனர். என்பதனை சுட்டிக்காட்டியுள்ளேன்
இருப்பினும் இதற்கு சட்டமா அதிபர் சாதகமான பதிலினை வழங்கவில்லை. மாறாக வழக்கிற்கான சாட்சிகளிற்கு அச்சுறுத்தல் இருப்பதனால் அவ்வாறு மேற்கொள்ள முடியாது என்றே பதிலளித்தார். இதற்கு மாற்று யோசனையாக அச்சுறுத்தல் எனில் சாட்சிகளிற்கு பாதுகாப்பை வழங்கி வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டும். மாறாக அனுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றுவது தீர்வாகாது என்தனையும் தெரிவித்துள்ளேன்.
இவற்றிற்கான சாதகமான பதில் கிடைக்காமையினால் இன்றைய தினம் இக்கைதிகளிற்காக இடம்பெறும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றதென தெரிவித்ததாக அது செய்தி வெளியிட்டுள்ளது.

 

About காண்டீபன்

மறுமொழி இடவும்