ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றுமாலை இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை கூழாவடி பகுதியில் நேற்று மாலை 6.45 மணியளவில் வீதியால் மோட்டார் சைக்கிளில் அண்ணன் தம்பி இருவர் சென்ற போது பின்னால் வந்தவர்கள் வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர். இதில் மானிப்பாயை சேர்ந்த 22 வயதுடைய விஜிதரன் இரண்டு கைகளிலும் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனைக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு!

