25ஆம் திகதிக்கு பின் வருமாறு திருப்பி அனுப்பப்பட்ட நாமல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ விசாரணை நடவடிக்கைகளுக்காக இன்று அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போதும் அவரை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் வருமாறு பொலிஸார் திருப்பியனுப்பியுள்ளனர்.

அம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவரை நாளைய தினம் விசாரணைக்காக வருமாறு அழைத்திருந்த போதும் நாளைய தினம் வேறு வழக்கொன்றுக்காக நீதிமன்றம் செல்லவுள்ளதால் இன்றைய தினம் விசாரணைக்காக சென்றிருந்தார். ஆனால் இன்றைய தினம் விசாரணை நடத்த முடியாது என தெரிவித்து 25ஆம் திகதிக்கு பின்னர் வருமாறு பொலிஸார் திருப்பியனுப்பியுள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்