குமரப்பா,புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு நாள் – பிரித்தானியா

இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளான அப்துல்லா ,ரகு ,நளன் ,ஆனந்தகுமார் ,மிரேஸ் ,அன்பழகன் ,ரெஜினோல்ட் ,பழனி ,கரன் ,தவக்குமார் ஆகியோரின் 30ம் ஆண்டு நினைவு நாள் வடமேற்கு லண்டன் பகுதியில் பிரித்தானிய ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது .

ஈகைச்சுடரினை திருமதி சுபா ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை கப்டன் அருந்ததி அவர்களின் சகோதரனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் உதவி பொறுப்பாளருமான திரு நிமலன் ஏற்றிவைத்தார்.
திருஉருவத்திற்கான மலர்மாலையினை கடல் புலி கப்டன் நாவலன் அவர்களின் சகோதரன் திரு மதீசன்
அணிவித்தார்.

வணக்க நிகழ்வில் சிறுவர்களின் குழு நடனம் தனிநடனம் நிகழ்விற்க்கான நினைவுரையை ஊடகவியலாளர் ச ச முத்து வழங்கினார் சமகால அரசியலும் தமிழ் மக்களின் விழிப்புணர்வும் என்கின்ற தலைப்பில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அரசியல் துறை ஒருங்கிணைப்பாளர் திரு சதா அவர்கள் வழங்கினார்.

எல்லா சோதனைகளிலும் வென்றிருக்கிறேன் இதிலும் நிச்சயம் வெல்வேன் இல்லையேல் இலட்சியத்திற்காக சாவேன் என்கின்ற புலேந்திரனின் வரிகளை உறுதிமொழியாக கொண்டு நிகழ்வானது முடிவடைந்தது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்