வவுனியாவில் பாடசாலை தீக்கிரை!

வவுனியா மறவன்குளம் பாரதிதாஸன் வித்தியாலயத்தின் தற்காலிக வகுப்பறை கொட்டகை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 80 அடி கொண்ட தற்காலிக வகுப்பறை கொட்டகையே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற இருந்த நிலையில் அதிகாலை 12.30 மணியளவில் கிராமத்தவர்கள், பெற்றொர்கள் ஒன்றிணைந்து பாடசாலையை அலங்கரித்திருந்தனர்.

இதன் பின்னர் இன்று ஆசிரியர் தினத்திற்கான உணவு சமைக்கும் வேலைக்காக பாடசாலைக்கு வந்த போது குறித்த கொட்டகை தீப்பற்றி முழுமையாக எரிந்துள்ளதை அவதானித்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பின் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்