வாழ உரித்துடையவர்கள் என ஐ.நா அங்கீகரிக்கும் வரை போராடுவோம்: தர்மலிங்கம் சுரேஸ்

இந்த தேசத்தில் வாழ உரித்துடையவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் அதுவரை எமது உரிமையை விட்டுக் கொடுக்காது போராடவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனி கட்சியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தாமரைக்கேணியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனி கட்சியின் புதிய காரியாலய திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“20வது அரசியல் தீர்திருத்தம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் தமிழ் மக்கள் கேட்டுவந்த அடிப்படை அபிலாஷைகள் எதுவும் இல்லை. இந்த புதிய அரசியல் தீர்திருத்தத்தில் வடகிழக்கு இணைப்பு இல்லை எனவே வடகிழக்கு இணைப்பு இல்லாவிட்டால் கிழக்கு தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என சிந்தித்து பார்க்கவேண்டும்.

கலை கலாச்சார பண்பாடுகளை இவ்வாறு பல விதமான போராட்டங்களை இரண்டு இனங்களுக்கு எதிராக கிழக்கு தமிழ் மக்கள் செயற்பட வேண்டி ஒரு துப்பாக்கியமான நிலைஏற்பட்டுள்ளது. நாங்கள் உலகத்தில் நடக்காததை கேட்கவில்லை இந்த மண்ணில் 60 ஆயிரம் மாவீரர்கள் 4 இலட்சம் மக்கள் புதையுண்டுள்ளனர் அவர்கள் போராடியது எமது தேசத்தை பெறுவதற்காகவே. தமிழ் மக்கள் ஒரு தேசத்தில் சுய நிர்ணய உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகத்தான் போராடுகின்றோம்” என கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்