நல்லாட்சி அரசின் காணிபிடிக்கும் தந்திரம் கிளிநொச்சியில்!

நல்லாட்சி அரசின் வன்னியை தாரைவார்க்கும் புதிய திட்டத்தின் கீழ் சிங்களவர் ஒருவர் கஜீ பண்ணை அமைக்க மேலும் 600 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிவழங்கியுள்ளது.

ஏற்கனவே பூநகரியினில் சுமாh 1500 ஏக்கர் கொண்ட கஜீ பண்ணையை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலையினில் மேலும்; 600 ஏக்கர் நிலத்தை சிங்களவர் ஒருவருக்கு ஒதுக்கிவழங்க இலங்கை அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ-32 வீதியினில் பூநகரியினில் விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்டு வந்த 1500 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பினை கொண்ட கஜீ பண்ணையை இலங்கை இராணுவம் 2009 யுத்தத்தின் பின்னராக தற்போதுவரை ஆக்கிரமித்து வைத்துள்ளது.

யுத்தத்தின் பின்னராக நிரந்தர காணிகள் ஏதுமின்றி அகதி வாழ்க்கையினை வாழ்ந்துவரும் மக்களிற்கு காணிகள் அற்ற நிலையிலும் வேலை வாய்ப்பினை கருத்தினில் கொண்டும் குறித்த கஜு பண்ணையினை விடுவிக்க படைத்தரப்பு பின்னடித்துவருகின்றது.

இதனிடையே குறித்த காணி வழங்கல் தொடர்பினில் உரிய விளக்கத்தை பெற்று தனக்கு விபரம் தர வடமாகாண முதலமைச்சர் காணி ஆணையாளரை பணித்துள்ளதாக தெரியவருகின்றது.
தமிழ் மக்கள் காணிகளின்றி அலைகின்ற சூழலில் கொழும்பு அரசு சிங்களவர்களிற்கு கிளிநொச்சியினில் காணி கொடுப்பதை முதலமைச்சர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்

மறுமொழி இடவும்