தமிழர் வாழ்வை காரிருள் சூழ்ந்திருக்கையில் அலரி மாளிகையில் தீபாவளி கொட்டாட்டத்திற்கு ஏற்பாடு!

தாயகத் தமிழர்களின் வாழ்வு இருண்டு கிடக்கையில் அலரி மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுவருவதாக தகவல் கிடைத்துள்ளது.

‘தேசிய தீபாவளிப் பண்டிகை’ என்ற பெயரில் குறித்த நிகழ்வு வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அலரி மாளிகையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதம அமைச்சர் அலுவலகம் ஆகியவற்றின் சார்பில் தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பிதல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் நீதிக்குப்புறம்பான சிறைவாழ்வு தொடர்ந்து வருகின்றது… இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை… உயர்பாதுகாப்பு வளையத்தின் பெயரில் அபகரிக்கப்பட்டிருக்கும் தமிழர் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு தொடர்கிறது… தமிழர்களின் இன-மத-மொழி அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவது தொடர்கதையாகி வருகின்றது… தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை குழுதோண்டிப் புதைக்கும் வகையிலான அரசியலமைப்பு முன்மொழிவு… என எல்லாவகையிலும் தமிழர்களின் வாழ்வை காரிருள் சூழ்ந்திருக்கையில் கொழும்பில் தேசிய தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் உணர்வுகளுக்கு நேர் விரோதமான போக்கில் சிறிலங்கா அரசு பயனித்து வருவதை அம்பலமாக்குகின்றது.

சர்வதேச சமூகத்திற்கு தமிழர்களும் சிங்களர்களும் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கொண்டாட்ட நிகழ்வில் தமிழ்த்தலைவர்கள் கலந்து கொள்வதானது மாபெரும் துரோகமாகும்.

ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.

 

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்