சீனாவுடன் இணைந்து செயற்படும் நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – அமெரிக்கப் படைத் தளபதி

சினாவுடன் இணைந்து செயற்படும் போது ஒவ்வொரு நாடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அமெரிக்கக் கடற்படையின் உயர்மட்ட அதிகாரியான றியர் அட்மிரல் டொனால்ட் டி கப்ரியேல்சன்.

பிராந்தியத்தில் – குறிப்பாக சிறிலங்காவில் சீனாவின் பிரசன்னத்தை பற்றி அமெரிக்கா கவலை கொண்டுள்ளதா என்று சிறிலங்கா வந்துள்ள றியர் அட்மிரல் மொனால்ட் டி கப்ரியேல்சனிடம் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்த அவர், “ சில விடயங்களில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயற்படாததால், சீனாவுடன் இணைந்து செயற்படும் போது ஒவ்வொரு நாடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சீனா தற்போது நன்மைகளை பெற்றுக் கொண்டிருக்கும் அமைப்பு முறையை மறுசீரமைக்க முயல்கிறது. இது கவலையளிக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் தெற்கிழக்காசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர், கேணல் ஜோசப்
இலங்கைக்கு பயணம்மேற்கொண்டுள்ள ஐநாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை விசேட நிபுணர் பப்லு டி கிரீப் இன்று

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*