யாழில் 153 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பொதியிலிருந்து நூற்று ஐம்பத்து மூன்று கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குட்பட்ட பகுதியில் அநாதரவாக காணப்பட்ட பொதி ஒன்று தொடர்பில் தகவலறிந்த கடற்படையினர் இன்று மாலை குறித்த பொதியை சோதனைக்குட்படுத்தினர்.
இதன்போதே குறித்த பொதியிலிருந்து 153 கிலோ கேரளகஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பொதியை கடத்திவந்த நபர்கள் கடற்படையினர் வருகையை அறிந்து அதை கைவிட்டு சென்றிருக்கலாம் என தரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளகஞ்சா தற்போது யாழ் காங்கேசன்துறை பொலிவாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்